நீர்வெறுப்புநோய் பற்றி


நீர்வெறுப்புநோய் என்பது மிருகங்களின் உமிழ்நீரின் மூலம் நீர்வெறுப்புநோய் வைரஸினால் பரவக்கூடியது இந்த வைரஸ் மனித மூளையில் மூளை அலற்சியை உருவாக்குகின்றது.

நீர்வெறுப்புநோய் அறிகுறிகள் வருவதற்குமுன் நீர்வெறுப்புநோய்க்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளாவிட்டால் இறப்பு நிச்சயமானது. உலகத்தில் அண்ணலவாக 55000 பேர் அந்நோயினால் ஒருவருடத்தில் இறக்கின்றனர். இதில் 95மூ சதவீதமானவர்கள் ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் சேர்ந்தவர்கள். ஆசியால் 31000 பேர் நாய்களினால் மனிதநீர்வெறுப்புநோய் ஏற்பட்டு இறக்கின்றன.

நீர்வெறுப்புநோய் வைரஸ் ஆனது சாதி lyssavirus பரம்பரை காரணியை கொண்ட rhabdoviridae குடும்பத்தைச் சார்ந்ததாகும். இது உருளைவடிவான கவர் ஒன்றினால் சுNயு பரம்பரை காரணி மூடப்பட்டுள்ளது.

நீர்வெறுப்புநோயின் நோய் அறிகுறிகளாக உடல்சோர்வு ,தலையிடி,காய்சல், போன்றன தொடர்ந்து வன்முறைசெயற்பாடுகள் மன எழுச்சி ,பயம்,(காற்றைக்கண்டு )மூச்சதினறல் ஏற்பட்டு இறுதியில் இறப்பு ஏற்படும்.

இலங்கையில் நாய்களினால்தான் கூடுதலாக நீர்வெறுப்புநோய் பரவுகின்றது அதைவிட பூனை சருகுப்பூனை, குள்ளநரி, பெருச்சாளி போன்றவைகளும் இந்நோயை பரப்புகின்றன்.

இலங்கையில் வருடாந்தம் நீர்வெறுப்புநோய் தொற்றுக்குள்ளான நாய்களினால் நீர்வெறுப்புநோய் மனிதனுக்கு தொற்றி 20-30 மனித இறப்புக்கள் ஏற்படுகின்றது. இதற்கான காரணம் வருடாந்தம் நாய்களுக்கு வழங்க வேண்டிய நீர்வெறுப்புநோய் தடைமருந்து கிடைக்கப்படாமை மற்றும் நாய் கடித்ததும் பெறவேண்டிய நீர்வெறுப்புநோய்க்குரிய விசேட சிகிச்சையினை உடனடியாகசென்று வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளாமையாகும். நாய்கடித்ததும் உடனடியாக நீர்வெறுப்புநோய்க்குரிய சிகிச்சை முறையை வைத்தியசாலைக்கு சென்றுபெற்றுக்கொண்டால் 100சதவீதம் நோய் வராமல் தடுக்க்ககூடிய நோயாகும் அத்துடன் இதற்காக வழங்கப்படும்; தடைமருந்து மற்றும் சீரம் அரசாங்க வைத்தியசாலையில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

எல்லாநாய்களுக்கும் 6 வாரங்களுக்குமேல் வருடா வருடம் நீர்வெறுப்புநோய்க்குரிய தடைமருந்து பெற்றுக்கொடுக்கும்படி நீர்வெறுப்புநோய் தடைப்பிரிவு அதிகாரிகளினால் பரிந்துரை செய்யப்படுகின்றது. இலங்கையில் 1975 ம் ஆண்டு மனிதநீர்வெறுப்புநோயினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது இதன்பின்னரே அதற்கான நோய்தடுப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்ட்டது.மனிதநீர்வெறுப்புநோயினால் 1973 ஆண்டு 377ம் ,2014 இல் 19 பேரும் இறந்துள்ளனர்..அட்டவணை 1 இல் மனிதநீர்வெறுப்புநோய் குறைந்து செல்வதை 1972 தொடக்கம் 2013 வரை அவதானிக்கலாம்.