இலங்கையில் நாயானது நீர்வெறுப்புநோய் பரப்புவதில் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது.1980ம் ஆண்டு சூழலியல் ஆய்வின் பிரகாரம் நாய்களின் எண்ணிக்கைக்கும் மனித சனத்தொகைக்கும் இடையிலான விகிதம் 1:8 ஆக காணப்பட்டது. இதன்பின் 1996 ம் ஆண்டு மீரிகமவில் நடாத்தப்பட்ட சூழலியல் ஆய்வின் பிரகாரம் நாய்களின் எண்ணிக்கைக்கும் மனித சனத்தொகைக்கும் இடையிலான விகிதம் 1:4 ஆக காணப்பட்டது. மேலும் 20மூ சதவீதமான நாய்கள் தெருநாய்களாக காணப்படுகின்றது என்ற முடிவும் பெறப்பட்டது. பின் இந்த சூழலியல் ஆய்வுகளை 2009,2010ம் ஆண்டுகளில் பொலநறுவை,கேகாலை,கம்பகா,மாத்தறை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது இதன்படி நாய்களின் எண்ணிக்கைக்கும் மனித சனத்தொகைக்கும் இடையிலான விகிதம் 1:6 ஆக காணப்பட்டது.
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் மிருக நீர்வெறுப்புநோயில் 85மூசதவீதம் நாய்கிலே காணப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அத்துடன் நீர்வெறுப்புநோய் கண்டுபிடிக்கும் முறையில் (அதாவது மூளைப்பரிசோதணை) தலைப்பரிசோதணையின் போது 58மூ சதவீதமான நாய்களின் தலைகளில் நீர்வெறுப்புநோய் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொது சுகாதார மிருக வைத்திய சேவையின் முக்கியமான நோக்கமாக நாய்களுக்கான தடுப்புநடவடிக்கையின் மூலம் மனித நீர்வெறுப்புநோய் மனிதனுக்கு வராமல் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையாக மேற்கொள்ளுகின்றது.