தேசிய நிகழ்ச்சிதிட்டத்தின் நோக்கங்கள்

  1. நீர்வெறுப்பு நோய் என சந்தேகப்படுகின்றவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
  2. நீர்வெறுப்புநோய் தொற்று கூடிய அளவு உள்ளவர்களையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்தல்.
  3. விசேடமாக நாய்களுக்குரிய மீந்துநிற்கும் நிட்பீடணத்தை உறுதிப்படுத்தல்.
  1. சரியான முறையினுடாக விசேடமாகா நாய்களுக்கு சனத்தொகை கட்டுப்பாட்டை வலியுருத்தல்.
  2. மனிதாபிமானத்துடன் நீர்வெறுப்புநோய் உள்ளது என சந்தேகப்படுகின்ற நாய்களை அகற்றுதல்.
  3. பன்றிகளில் இருந்து யப்பானிய மூளைகாய்ச்சல் கடத்தப்படுவதை கட்டுப்படுத்தல்.

முக்கிய நடவடிக்கைகள்

  1. நீர்வெறுப்புநோய் உடைய மிருகங்கள் கடித்தற்கான விசேட சிகிச்சைக்குரிய ஒதுக்கீட்டை மேற்கொள்ளுதல்.
  2. நாய்களுக்கான நீர்வெறுப்புநோய் தடை மருந்துகளை பாரிய அளவிலான தடைமருந்தேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் வழங்குதல்.
  3. பாரிய மிருக கருத்தடை நிகழ்சித்திட்டங்களை நடாத்தல்.
  4. பாரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுதல்.
  5. எல்லா நீர்வெறுப்புநோய் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் பங்குதாரர்களுக்கும் பயிற்ச்சிகளை நடாத்துதல்.
  1. ஆய்வுகளையும் ஆராச்சிகளையும் மேற்கொள்ளுதல்.
  2. நீர்வெறுப்புநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நடைபெறும் போது அதற்கான கண்காணிப்பையும் மீளாய்வையும் மேற்கொள்ளுதல்.
  3. நீர்வெறுப்புநோய் ஆய்வுமுறைகளை வலியுறுத்தல்.
  4. நீர்வெறுப்புநோய் கட்டுப்பாட்டுக்கான சட்டங்களை அமுல்படுத்தல்.
  5. பாரிய நிட்பீடணம் வழங்கள் நிகழ்ச்சிகள் மூலம் பன்றிகளில் யப்பானிய மூளைக்காய்ச்சல்நோயைக் கட்டுப்படுத்தல்.
 

ஆதாயங்கள் அல்லது அடைவுகள்

இலங்கையில் 1975ம் ஆண்டு மனிதநீர்வெறுப்புநோய்யினால் மிகப்பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது அதனைத் தொடர்ந்து நீர்வெறுப்புநோய் கட்டுப்பாடு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 1973ம் ஆண்டு 377 மனித நீர்வெறுப்புநோயினால் இறப்புகள் ஏற்பட்டது. ஆனால் 2014 ம் ஆண்டு 14 மனித நீர்வெறுப்புநோயிய்; மரணமாக காணப்படுகின்றது.